About Us
Tirunelveli Diocese Youth Association (TDYA)
தென்னிந்திய திருச்சபை – திருநெல்வேலி திருமண்டலத்தின் ஒரு முக்கியமான இளைஞர் இயக்கமாக திருநெல்வேலி திருமண்டல வாலிபர் ஐக்கிய சங்கம் (TDYA) செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு வாலிபர்களை ஆன்மீகமாகவும், சமூக ரீதியாகவும், கல்வி மற்றும் வாழ்வாதார ரீதியாகவும் உயர்த்தும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஊழியம் 1948 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி பேராயர் செல்வின் அவர்களால் தொடங்கப்பட்டது. 1985 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் திருநெல்வேலி திருமண்டலத்தின் தனித்துறையாக செயல்பட்டு வருகிறது. TDYA அலுவலகம் நூற்றாண்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ளது.
தற்போது 12 ஆண்களும், 4 பெண்களும் முழுநேர ஊழியர்களாகவும், 4 பேர் பகுதி நேர பணியாளர்களாகவும் TDYA ஊழியத்தில் பணியாற்றி வருகின்றனர்.
Vision (லட்சியம்)
விசுவாசம் – ஐக்கியம் – ஊழியம்
Mission (நோக்கம்)
திருமண்டலத்தின் அனைத்து சபைகளிலும் உள்ள வாலிப சகோதரர், சகோதரிகளிடையே வாலிபர் ஐக்கிய சங்கங்களை அமைத்து, அவர்களை ஜெப வாழ்க்கை, வேத வாசிப்பு, சுவிசேஷ ஊழியம் மற்றும் சமூக சேவைகளில் பயிற்றுவித்து, ஆவிக்குரிய வளர்ச்சிக்கு வழிநடத்துதல்.
Our Ministries (நடைபெறும் ஊழியங்கள்)
- வாலிபர்களை வீடுகளில் சந்தித்து ஆலயத்திற்கு அழைத்து வந்து சிறப்பு கூட்டங்கள் நடத்துதல்
- வாலிபர் கூடுகைகள் நடைபெறாத இடங்களில் ஜெபக் குழுக்களை உருவாக்குதல்
- திருமண்டல அளவில் மூன்று நாள் முகாம்கள் மற்றும் சபை/சேகர அளவில் ஒருநாள் முகாம்கள்
- பாடசாலைகளில் பயிலும் இளம் வாலிபர்களுக்கு வாரந்தோறும் ஆலோசனை வழங்குதல்
- திடப்படுத்தல் ஆயத்தம் பெறும் மாணவர்களுக்கு ஒருநாள் சிறப்பு முகாம்கள்
- ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்லூரி, மேல் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு கூட்டங்கள்
- இன்னிசை இரவு மற்றும் வாலிபர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
- திருச்சபை மற்றும் தேசத்திற்காக சங்கிலித் தொடர் ஜெபம்
- வாலிபர்களுக்கான இசைப் பயிற்சி வகுப்புகள்
- ஒவ்வொரு மாதமும் 6 சபைமன்றங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் சேகரங்களில் தங்கி வாலிபர் சந்திப்பு ஊழியம்
Other Ministries (பிற ஊழியங்கள்)
குடும்ப தினதியானம்:
தினந்தோறும் வேதம் வாசித்து தியானிக்க ஆண்டுதோறும் தினதியான நூல் வெளியிடப்படுகிறது.
வாலிபர் தோழன் (Magazine):
இரு மாதத்திற்கு ஒருமுறை வெளியிடப்படும் இந்த பத்திரிக்கையில் தியானம், வாலிபர் மற்றும் பெற்றோருக்கான ஆலோசனை, மருத்துவம், தொடர்கதைகள், வேதவினா போட்டிகள் உள்ளிட்ட பல பயனுள்ள செய்திகள் இடம்பெறுகின்றன.
Career Guidance – TDYACG:
வேலையில்லாத வாலிபர்கள் தங்கள் கல்வி மற்றும் திறமைகளுக்கு ஏற்ற வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள TDYACG (Tirunelveli Diocese Youth Association Career Guidance) என்கிற இணையதளம் செயல்பட்டு வருகிறது.
YouTube & Television Ministry:
TDYA YouTube Channel மூலமாக திங்கள்தோறும் வாலிபர்களுக்கு நல் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. மேலும் ஞாயிறுதோறும் மாலை 5 மணிக்கு JTK TV-யில் வாலிபர்களுக்கான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன.
Educational & Motivational Programmes:
ஏழை மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகின்றது. மேலும் பள்ளி, கல்லூரி மற்றும் திருச்சபைகளில் மருத்துவர்களுடன் தற்கொலை விழிப்புணர்வு மற்றும் ஊக்கமளிக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
Future Plans (எதிர்காலத் திட்டங்கள்)
- வாலிபர்களை மிஷனரிகளாக உருவாக்குதல்
- ஆளுமைத்திறன் பயிற்சி வகுப்புகள்
- வாலிபர் தோழன் பத்திரிக்கையை E-Book ஆக வெளியிடுதல்
- திறமையான வாலிபர்களை ஊழியத்தில் இணைத்தல்
- Spoken English மற்றும் IAS / IPS தேர்வு பயிற்சிகள்
கர்த்தர் வாலிபர்கள் மத்தியில் செய்யப்படும் இந்த ஊழியங்களை ஆசீர்வதிப்பாராக.
Tirunelveli Diocese History:
திருநெல்வேலி திருச்சபையின் வரலாறு 1780ல் பாளையங்கோட்டையில் உள்ள சிறு ஆலயமான குளோரிந்தா ஆலயத்தில் இருந்து துவங்குகிறது. நாற்பது விசுவாசிகளுடன் ஆரம்பமான திருச்சபை நாளடைவில் கிறிஸ்துவின் அன்பால் கடற்மண் போல பெருகியது. ஆரம்பத்தில் SPCK எனும் மிசனரி சங்கத்தினரால் நடந்தப்பட்ட திருச்சபை SPG,CMS எனும் மாபெரும் தரிசனத்துடன் இறங்கிய இரு ஆங்கிலிக்கன் மிசனரி சங்கங்களின் வசம் சேர்ந்தது. ரேனியஸ் ஐயர் தொடங்கி கால்டுவெல், மர்காசிஸ், சாப்டர் போன்ற பல மிசனரிகள் இந்த மிசனரி சங்கங்களின் மூலமே வந்திறங்கினர். திருச்சபை வளர்ந்து பெருகி சுதந்திர இந்தியாவில் சுயாதீனம் பெற்று தென் இந்திய திருச்சபை ஒன்றியத்துடன் இணைந்தது.
TDYA History:
திருநெல்வேலி திருமண்டல வாலிபர் ஐக்கிய சங்கம் 1948 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. ஒவ்வொரு சேகரத்திலும் உள்ள இளைஞர் அமைப்புகள் திருச்சபைக்கென்று சிறப்பான பங்களிப்புகளை கொடுத்து வருகின்றனர்.
What is Tdya CG.Com:
நம்முடைய திருச்சபை வாலிபர்கள் கல்வியிலும், தொழில் நுட்ப திறமைகளிலும் சிறந்து விளங்குவதற்க்காகவும் வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்ளவும் www.TdyaCG.Com என்கிற website நம்முடைய வாலிபர் ஐக்கிய சங்கம் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளது.

